பழவேற்காடு பகுதியில் பதிக்கு படகு வழியாக ஆந்திராவிற்கு கடத்த வைத்திருந்த 1டன் அரிசி பறிமுதல் பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் அதிரடி நடவடிக்கை
பழவேற்காட்டில் விற்பனைக்காக கடத்திப் பதுக்கி வைத்திருந்த 1041 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு நேதாஜி தெருவில் தமிழக அரசின் பொது விநியோகத் திட்ட ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு கடத்தி விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் சுமார் ஒரு டன் ரேசன் அரிசியை பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் திருப்பாலைவனம் காவல்துறையினர் உதவியுடன் பறிமுதல் செய்தார் பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைத்தனர். பழவேற்காடு ஏரி வழியாக படகுமூலம் தமிழக அரசின் ரேஷன் அரிசியை தொடர்ந்து கடத்தி ஆந்திராவிற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது