பழவேற்காடு: மாணவியிடம் தவறாக நடந்த ஆசிரியர் கைது

57பார்த்தது
பழவேற்காடு அருகே அரசு ஆரம்பப்பள்ளி தற்காலிக ஆசிரியர் பள்ளி மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதால்
ஆத்திரமடைந்த மீனவர் கிராம மக்கள் வகுப்பறையில் வைத்து ஆசிரியரை பூட்டி காவல்துறைக்கு தகவல் அளித்தனர்


திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே உள்ள கோரை குப்பம் மீனவ கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் 51 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் இந்த நிலையில் இப்பள்ளியில் மேலாண்மை குழு மூலமாக தற்காலிக ஆசிரியராக இளஞ்செழியன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தார் கணித ஆசிரியரான இவர் இப்பள்ளியில் பயிலும் ஆறாம் வகுப்பு மாணவியிடம் உணவு இடைவெளியின் போது தவறாக நடந்து கொண்டதாக மாணவி பெற்றோரிடம் கூறியதன் பேரில் ஆத்திரமடைந்த மீனவ கிராமமக்கள்
ஆசிரியரை வகுப்பறையில் அவரைத் தாக்கி பூட்டி வைத்து காட்டூர் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த வந்த போலீசார் அவரை வாகனத்தில் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பள்ளியில் மாணவியிடம் ஆசிரியர் தவறாக நடந்து கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி