பொன்னேரி: அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம்

52பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆற்றில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நிரம்பி காட்டூர் ஏரியும் நிரம்பியதால்
அத்தமணஞ்சேரி, பெரியமனோபுரம்
ஏரியப்பிள்ளை குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் மழை நீர் சூழ்ந்து மூழ்கியுள்ளதால் மழை நீர் வெளியேற போதிய வழி இல்லாததால் காட்டூர் ஏரியிலிருந்து மழை நீரை வெளியேற்ற மதகுகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததால் காட்டூரில் மதகுகளை திறந்து வெளியேற்ற விவசாயிகளே வந்ததால் அவர்களை தடுத்து நிறுத்திய பொதுப்பணித்துறை மற்றும் காவல் துறையினர் பிரச்சனைக்கு
தீர்வு காண்பதாக சமரசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காட்டூர் ஏரியை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளதாகவும் அதற்குத் தேவையான பாசன நீரை கடலில் திறப்பதால் தங்கள் நெற் பயிர்கள் வீணாகிவிடும் என அப்பகுதி விவசாயிகள் தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
ஏற்கனவே நான்கு மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் மழை நீர் கடலில் வீணாகி வரும் நிலையில்
மேலும் நான்கு மதகுகளை திறக்க கூடாது என ஒரு தரப்பினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி