திருவள்ளூர் மாவட்டம் கூடுவாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட மழை நீர் செல்லும் மடுவில் பொதுப்பணித் துறையினர் மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தங்கள் பகுதியில் மண்ணை அள்ளக்கூடாது என்றும்
ஆரணி ஆற்றின் கரையை பலப்படுத்த மண் அள்ளுவதாக கூறி மண்ணை தனியாருக்கு விற்பனை செய்வதாகவும் தங்கள் பகுதியில் மண் அள்ளக் கூடாது என கூறி பரிக்கப்பட்டு உப்பளம் கூடுவாஞ்சேரி பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்கள் பகுதியில் மண் எடுப்பதால் மடுவு வழியாக வெள்ள நீர் வழிந்து ஓடும் பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் என்றும் சாலையின் குறுக்கே உள்ள மேம்பாலம் அடித்து செல்லப்படும் நிலை உருவாகும் என்றும் எனவே நீர்நிலை அருகே பள்ளம் ஏற்படுவதால் அடிக்கடி உயிர் விபத்துக்கள் ஏற்படும் தங்கள் பகுதியில் மண்ணை எடுக்க விடமாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து திரண்டு வந்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிவசண்முகம் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக மண் எடுப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு போலீசார் அங்கு பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்