மீஞ்சூர்: ஆபத்தான நிலையில் மின்வாரிய கட்டிடம்ஊழியர்கள் அச்சம்

55பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் மின்சார வாரியம் இந்த பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இந்த அலுவலகத்தில் இருந்து தான் பணியாளர்கள் வேலை செய்கின்றனர் மிகப்பெரிய பேரூராட்சியில் இருக்கும் மின்சார வாரியத்திற்கு சொந்தமாக கட்டிடம் இல்லை மீஞ்சூர் மின்சார வாரியம் இயங்கி வரும் இடம் ஒரு தனியாருக்கு சொந்தமானதாகும் இந்த கட்டிடத்தில் மேல்கூரையில் வாடகைக்கு இருந்தவர்கள் பல வருடங்களுக்கு முன்னாலே காலி செய்த நிலையில் கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருப்பதாக கூறி கட்டிடத்தில் உரிமையாளர் மீஞ்சூர் மின்சார வாரியத்தை காலி செய்ய கூறி இருந்தார். ஆனால் அதற்கு மின்சார வாரியம் மறுப்பு தெரிவித்ததால் கட்டிடத்தின் ஊழியர் கோர்ட் வரை சென்று வழக்கு நடத்தி வருகிறார். மேலும் இந்த கட்டிடம் இடிந்து விழுந்தாலும் இதில் உள்ளே வேலை செய்பவர்களுக்கு ஏதேனும் உயிர் இழப்பு ஏற்பட்டாலோ அதற்கு தான் பொறுப்பு நான் இல்லை என்று ஒரு கடிதத்தையும் அவர் நீதிமன்றத்தில் அளித்ததாக இங்கு உள்ள மின்சார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மழைக் காலங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக கட்டிடத்தில் உள்ளே ஆங்காங்கே தண்ணீர் ஊற்றுவதும் சில இடங்களில் கூரை விழுவதுமாக இருக்கிறது. ஆனாலும் வேறு வழி இல்லாமல் இங்கு வேலை செய்யும் ஊழியர்கள் இந்த கட்டிடத்தில் வேலை செய்ய வேண்டிய நிலையை தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி