சிறுவாபுரி: பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் சூரசம்ஹார விழா

80பார்த்தது
சிறுவாபுரி முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா வெகு சிறப்பாக நடைபெற்றது சென்னை செங்குன்றம் சோழவரம் பொன்னேரி மீஞ்சூர் திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றி அரோகரா கோஷத்துடன் முருகப்பெருமானை வழிபட்டனர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் சின்னம்பேடு கிராமத்தில் அமைந்த பிரசித்தி பெற்ற சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான இன்று கோவில் கோபுரம் முன்பு கிராம மக்கள் பக்தர்கள் புடை சூழ முருகப்பெருமான் தன்னுடைய போர்படை தளபதியான வீர பாகுவுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருப்பாளித்தார். சிங்கம் யானை மான் ஆடு சேவல் மாமரம் உள்ளிட்ட உருவங்களில் சூரபத்மன் எழுந்து வர வேல் தரித்து வந்த பால சுப்பிரமணியர் சூரனை எதிர்கொண்டு வீழ்த்தி வெற்றிவாகை சூடினார். வான வேடிக்கைகளுடன் நிகழ்ந்த சூர சம்ஹாரத்தை
ஏராளமான பக்தர்கள் கண்டுக்களித்து ஹரோ கரா கோசத்துடன் முருகனை வழிபட்டனர் பின்னர் முருகப்பெருமான் கோவில் பிரகாரத்தில் மூன்று முறை வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி