விபத்தில் சிக்கிய புள்ளிமான்: முதலுதவி அளித்த இளைஞர்கள்

68பார்த்தது
சுட்டெரிக்கும் கோடை வெயில் தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் பொன்னேரி திருவெற்றியூர் சாலையில் வாகனம் மோதி உயிருக்கு போராடிய நிலையில் இளைஞர்கள் மீட்டு முதலுதவி அளித்து ஒப்படைத்தனர்



திருவள்ளூர் மாவட்டம் மேலூர் கிராமத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக வனப்பகுதி காப்புக் காடுகளில் போதிய தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் தண்ணீர் தேடி வந்த ஆண் புள்ளிமான் ஒன்று பொன்னேரி திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் வால் மற்றும் கால் பகுதியில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் அப்பகுதி இளைஞர்கள் மானை
மீட்டு முதலுதவி அளித்து
உடனடியாக மீஞ்சூர் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் மானை வனத்துறையினர் மீட்டுக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

கடந்த ஆண்டும் மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் பல்வேறு இடங்களில் ஐந்திற்கும் மேற்பட்ட மான்கள் தண்ணீர் தேடி வந்து உயிரிழந்த நிலையில் தற்போது தண்ணீர் தேடி வந்த புள்ளி மான் லாரியில் அடிபட்டு விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று வனவிலங்குகளுக்கு ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வகையில் வனத்துறையினர் வனவிலங்குகளுக்கு வனப்பகுதி காப்புக் காடுகளில் ஆங்காங்கு தண்ணீர் தொட்டி அமைத்து தண்ணீர் தாகத்தை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி