புரட்சி பாரதம் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்

53பார்த்தது
திருவள்ளூர் மத்திய மாவட்டம், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி புரட்சி பாரதம் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் கே. வி. குப்பம் எம். எல். ஏவுமான ஜெகன்மூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மத்திய அரசு கொண்டுவரும் மும்மொழி கொள்கையை புரட்சி பாரதம் முழுமையாக எதிர்க்கிறது. மத்திய அரசு கொண்டுவரும் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு திட்டத்தை 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி