மதுரவாயல் - Maduravayal

திருத்தணி: ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

திருத்தணி: ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

திருவாலங்காடு ஒன்றியம், மணவூர் ஊராட்சி கலைஞர்புரத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கலைஞர்புரம் மூன்றாவது தெருவில், 24 அடி அகலத்தில் பஞ்சாயத்து சாலை உள்ளது. ஊராட்சி நிர்வாகத்தால், 12 அடி அகலத்தில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சாலையை சிலர் ஆக்கிரமித்திருப்பதாகவும், இதனால் போக்குவரத்துக்கு இடையூறு உள்ளதாகவும் அதே பகுதியை சேர்ந்த சுமதி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் இறுதியில், ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, திருத்தணி வட்டாட்சியர் மலர்விழி தலைமையில் 20க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று அளவீடு செய்தனர். அப்போது பகுதிவாசிகள், தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகவும், ஒருவாரம் அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று, ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, அதிகாரிகள் கூறி சென்றனர். அசம்பாவிதம் தவிர்க்க, திருத்தணி டி. எஸ். பி. , கந்தன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా