திருவள்ளூர்: மல்லிகை பூ கத்திரி தோட்ட பயிர்கள் அழுகி நாசம்

52பார்த்தது
திருவள்ளூர் அருகே கொட்டி தீர்த்த கனமழையால் மல்லிகைப்பூ செடி தோட்டங்கள் முற்றிலும் அழுகி நாசமானது அதேபோன்று வெண்டை கத்திரிக்காய் தோட்டக்கலை பயிர்களும் மழைநீர் தேங்கி அழுகி வீணானது திருவள்ளூர் மாவட்டம் விடையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் அதிக அளவு தோட்டக்கலை பயிரான மல்லிகைப்பூ கத்திரி வெண்டை உள்ளிட்ட காய்கறி வகைகள் பயிரிடப்பட்டு வருகின்றன நூற்றுக்கணக்கான விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களை நம்பி பயிரிட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக கொட்டி தீர்த்த அதிக கன மழையால் போதிய கூலி ஆட்கள் வராததால் மலர்ந்த மல்லிகை பூக்களை தோட்டத்திலிருந்து பறிக்க முடியாமல் அப்படியே அவை மழையில் நனைந்து அழுகி வீணானது வேதனையோடு விவசாயிகள் தெரிவிக்கின்றன மேலும் கலியனூர் ராமன் கோவில் மேல்விளாகம் உள்ளிட்ட கிராமங்களில் ராமன் கோவில் தோட்டக்கலைப் பயிர்களான வெண்டை கத்திரி நாற்று விடப்பட்ட செடிகள் அனைத்தும் கனமழைக்கு அழுகிப்போனது பூக்களை பறித்து மார்க்கெட்டிற்கு அனுப்ப முடியாமல் விவசாயிகள் மல்லிகை மற்றும் மேரி கோல்ட் சாமந்திப்பூக்களை செடிகளிலேயே அவைகளை பறிக்க கூலி ஆட்கள் இல்லாமல் பறிக்காமல் விட்டு விட்டதால் புரட்டாசி மாதத்தில் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க வேண்டிய தருணத்தில் மழையால் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்பட்டு வருவதாக தோட்டப்பயிர் வைத்துள்ள விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி