இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை (நவ.01) தொடங்குகிறது. இப்போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுவதற்காக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.