மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா

85பார்த்தது
பழமைவாய்ந்த மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில்
திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மீஞ்சூர் ராமாரெட்டிபாளையம் கிராமத்தில் பழமைவாய்ந்த அருள்மிகு மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலானது பக்தர்கள் நிதியுதவியுடன் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில் 3 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி, காப்புக்கட்டுதல், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. இதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க சிவாச்சார்யார்கள் புனிதநீர் கலசங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதனை தொடர்ந்து கோவில் ராஜகோபுரத்தின் கலசங்களில் புன்னிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி