மதுரவாயல்: கல்லூரி மாணவர் மீது தாக்குதல் வீடியோ!

80பார்த்தது
பூந்தமல்லி அருகே மதுரவாயல் எம்ஜிஆர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த லலிதாம்பிகை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கல்லூரி முடிந்து மாணவர்கள் வெளியேறிக்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மாணவர் மீது 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சட்டை கிழிந்து கீழே விழுந்த அந்த மாணவரை அங்கிருந்த சக மாணவர்கள் எழுப்பி அழைத்துச் சென்றனர். காயத்துடன் அந்த மாணவர் அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த மாணவர் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மதுரவாயல் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகனம் நிறுத்துவதால் பார்க்கிங் பிரச்சனை ஏற்பட்டு இந்த மோதல் நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேசமயம் இதன் பின்னணியில் காதல் விவகாரம் அல்லது கல்லூரி மாணவர்கள் குழுக்கள் இடையேயான மோதல் ஏதேனும் இருக்கிறதா எனவும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி தரப்பிலிருந்தோ அல்லது மாணவர்கள் தரப்பிலிருந்தோ எந்தவித புகாரும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி