பூந்தமல்லி: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு

61பார்த்தது
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக
செம்பரம்பாக்கம் ஏரிக்கு திருவள்ளூர் அருகே உள்ள போளிவாக்கம் ஏரி நீரை திறந்து விட்டதால் நீர் வரத்து கிடுகிடுவென அதிகரிப்பு வினாடிக்கு 1080 கன அடி நீரானது செம்பரம்பாக்கம் ஏரியை வந்தடைவதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கணிசமாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது

செம்பரம்பாக்கம் ஏரி 13. 38 அடி நீர்மட்டம் உயர்ந்தது( மொத்த அடி 24).

மொத்த கொள்ளளவு
3645 மில்லியன் கனஅடியில் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் 1225 மில்லியன் கன அடி உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் அருகே உள்ள போளிவாக்கம் கிராமத்தின் ஏரி நீரை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை கருதி பொதுப்பணித்துறையினர் திறந்து விட்டதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டி அணையில் இருந்து லிங்க் கால்வாயில் திறந்து விடப்படும் வினாடிக்கு 250கன அடி நீருடன் சேர்த்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 1080கன அடி நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வந்து ஏரிகள் முழுமையாக நிரம்பாத நிலையில் வினாடிக்கு 1080 கன அடி நீர்வரத்து அதிகரித்துள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளான ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் பட்சத்தில் மேலும் கிடுகிடுவென ஏரியின் நீர்மட்டம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி