ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் பாலமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியா ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் 20 பணியாளர்களை பேருந்தில் ஏற்றுக்கொண்டு திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே மாநில நெடுஞ்சாலைகள் வந்து கொண்டிருந்தபோது பேருந்து கட்டுப்பாட்டில் இருந்து சாலை ஓரம் மரத்தின் மீது மோதி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணித்த 20 பணியாளர்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த பணியாளர்களை மீட்டு பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.