பொன்னேரி: அதிகபட்சமாக 2. 5 சென்டிமீட்டர் மழை
திருவள்ளூர்: பொன்னேரி, சோழவரம், செங்குன்றம் பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிகபட்சமாக 2.5 சென்டிமீட்டர் மழை பதிவானது. கும்மிடிப்பூண்டியில் 1.2 சென்டிமீட்டர் மழை பதிவானது. சோழவரம் 1.6 சென்டிமீட்டர், செங்குன்றம் 1.7 சென்டிமீட்டர், ஜமீன் கொரட்டூர் 1.3 செமீ, பூவிருந்தவல்லி, திருவலங்காடு தலா 1.1 சென்டிமீட்டர் மழை பதிவானது. திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 124.40 மில்லிமீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் சராசரி மழை அளவு 8.29 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.