சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கோவை, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் மீட்கப்பட்டனர். இருசக்கர வாகனத்தில் மோதிய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிச்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது.