ஆவடி: புகை மூட்டத்தால் சூழ்ந்த சென்னை புறநகர் பகுதி

63பார்த்தது
நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் மிக மகிழ்ச்சியாக கொண்டாடி அதிக அளவில் பட்டாசு வெடிப்பதன் காரணமாக ஆவடி அம்பத்தூர் பூந்தமல்லி பட்டாபிராம்மதுரவாயில் திருநின்றவூர் வேப்பம்பட்டு சுற்றுப்பகுதியில் புகைமண்டலமாக மாறியது

தீபாவளி பண்டிகை நாளான நேற்று நாடு முழுவதும் மிகவும் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடும் விதமாக வெடி வெடித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் இதன் காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை பட்டாசு அரசு விதித்த நேரத்தை மீறி இரவு 11 மணிக்கு மேலும் வெடித்து வருவதன் காரணமாக சென்னையில் முக்கிய பகுதியான ஆவடி அம்பத்தூர் பூந்தமல்லி மதுரவாயில் வில்லிவாக்கம் அண்ணா நகர் சுற்றுப்பகுதியில் புகை மண்டலமாக காட்சி அளித்து வருகிறது.
குறிப்பாக ஆவடி பேருந்து நிலையத்தில் முற்றிலும் புகை சூழ்ந்து காணப்படுவதால் பயணிகளும் அவதி அடைந்து வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி