வளசரவாக்கம் மண்டலம், 151வது வார்டு சின்ன போரூர் மருத்துவமனை சாலையில், சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை அமைந்துள்ளது.
அங்கு மகப்பேறு, நம்பிக்கை மையம், தீவிர சிகிச்சை உட்பட, பல்வேறு வார்டுகள் உள்ளன. இங்கு, பிரசவம் மற்றும் பரிசோதனைக்காக, தினமும் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணியர் வந்து செல்கின்றனர்.
மேலும், வளசரவாக்கம், போரூர், மதுரவாயல், நெற்குன்றம், காரம்பாக்கம், முகலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 300க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மருத்துவமனை எதிரே, நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி பிரசார வாகனம், மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனம் ஆம்புலன்ஸ் வந்து செல்லும் பாதையில் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சி பிரசார வாகனத்தை, அங்கிருந்து அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.