சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் சந்திரசேகர் அவரது மகன் பிரதீப் (28) என்பவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள அவரது சித்தப்பா சகாதேவ் என்பவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று அதிகாலை திருப்பதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்னையை நோக்கி சென்றார் திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை கூளூர் பகுதியில் சென்ற போது திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி வந்த தடம் எண் 97 பஸ் பைக் மீது வேகமாக மோதி விபத்தில் பைக்கில் சென்ற வாலிபர் பிரதீப் தூக்கி வீசப்பட்டு ரத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். கனகம்மாசத்திரம் போலீசார் இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பஸ் டிரைவர் அம்மையார் குப்பத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர் வீட்டுக்கு சென்று வீடு திரும்பி சென்ற போது பஸ் மோதி வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.