மாதவரம் - Madhavaram

புழல்: ஒரே நாடு ஒரே தேர்தல் சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும்.. ஜவாஹிருல்லா

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் சவுத் டிஜிட்டல் பேனர் கடையை ரிப்பன் வெட்டி மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா திறந்து வைத்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்தியாவில் மக்களாட்சி தத்துவம் என்பதை மாற்றி ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர வேண்டுமென்ற நோக்கத்தோடு செயல்படுவதாகவும், இது ஜனநாயகத்திற்கு ஆபத்தானதாகவும் மாநில உரிமையை பறிக்கும் செயலாகும் என்று கூறினார். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் என்ற அவர் ரயில்வே துறையில் விபத்துகள் தடம் புரள்வது அடிக்கடி நிகழ்வது ரயில்வே துறையில் மத்திய அரசு சீர்கெட்டு உள்ளதை காட்டுவதாகவும், வந்தே மாதரம் பற்றி பெருமையாக பேசுகிறார்கள் ஆனால் ரயில்வே துறையில் தற்போது உரிய சீரமைப்பு இல்லை என்றும், விஜயின் மாநாடு ஒன்றை வைத்து அவர் எதிர்கால அரசியலை கூற முடியாது என்று கூறினார்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా