திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி தலைமையில் செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்
அப்போது முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி பேசுகையில்
நடிகர்கள் பலர் கட்சிகளை ஆரம்பித்தாலும் அவர்களால் முதலமைச்சராக முடியாது
நடிகர்கள் காசுக்காக அலைபவர்கள்
திமுக ஆட்சியில் கோவில்கள் மதுபான கடைகளை கூட விட்டு வைப்பது இல்லை தமிழகம் முழுவதும் கோவில்களில் உண்டியலில் வரும் தங்கத்தை உருக்கி கலைஞரின் வீட்டிற்கு கொண்டு சென்று வைத்து விட்டார் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய அவர் தமிழகத்தில் குடிப்பழக்கம் அதிகமாகி விட்டது தமிழகம் குடிகார மாநிலமாக ஆகிவிட்டது
அடுத்து ஐந்து ஆண்டு திமுக ஆட்சி நீடித்தால் குழந்தைகளை பார்க்க முடியாது கஞ்சாவோடுதான் சுற்றுவார்கள்
இளைஞர்களை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கி தரைமட்டமாக ஆக்கிவிட்டார்கள்