திருத்தணி அருகே இளைஞர்கள் மது போதையில் ஆம்லெட் கேட்டு ரகளை

70பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே நெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா(49) இவர் என். என் கண்டிகையில் ஹோட்டல்  நடத்தி வருகிறார். வழக்கம்போல் மாலை மல்லிகா அவரது கணவர் கணேசன் மற்றும் ஹோட்டல் மாஸ்டர் கிருஷ்ணன் வியாபாரத்தில் இருந்தனர். அப்போது என். என் கண்டிகை  சேர்ந்த ராகுல் விமல் ஆகிய இரண்டு பேரும் மது போதையில் ஹோட்டலில் மல்லிகாவிடம் ஆம்லெட் கேட்டுள்ளனர். ஆம்லெட் போட்டு தருவதாக கூறியுள்ளனர். உடனே வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஹோட்டலில் இருந்த கரண்டி கட்டையால் மல்லிகா அவரது கணவர் கணேசன் ஹோட்டல் மாஸ்டர் கிருஷ்ணன் ஆகியோரே சராமாறியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மூவரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பின்னர் இது தொடர்பாக கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் வாலிபர்கள் ஹோட்டலில் ஆம்லெட் கேட்டு ஓட்டலின் உரிமையாளர் பெண் உட்பட மூன்று பேரை  தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி