தீபாவளி மற்றும் மறு நாள் தொடர் விடுமுறை காரணமாக ரூ.438 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளி தினத்தன்று மட்டும் ரூ.220 கோடிக்கு மது விற்பனையாகி இருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் டாஸ்மாக் விற்பனை விவரங்களை வெளியிட நிர்வாகம் வெளியிட மறுத்து வந்த நிலையில் தற்போது இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டாஸ்மாக் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி விவாத பொருளாகும் என்பதால் விவரங்கள் வெளியிட மறுத்தது.