திருவள்ளூர்: காளான் சமைத்து சாப்பிட்ட நான்கு பேர் சிகிச்சை

69பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட புட்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள கோ ஆப் டெக்ஸ் நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 46). இவர் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார். இந்த நிலையில் லட்சுமி தன் வீட்டின் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக முனைத்திருந்த காளானை பறித்து சமைத்தார். அந்த உணவை காலை லட்சுமி மற்றும் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த சாந்தி ( வயது 45), அலமேலு (வயது 31), வெங்கடேஷ் (வயது 23) சரண்யா (வயது 14) ஆகிய 5 பேரும் சாப்பிட்டனர். அந்த காளானை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் மேற்கண்ட 5 பேருக்கும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவதியுற்றனர்.

இதனால் அவர்களுக்கு மயக்க நிலை ஏற்பட்டது உடனடியாக அவர்கள் தானாக வீட்டின் அருகில் உள்ள சாலைக்கு கடந்து வந்து ரோட்டில் விழுந்து விட்டனர் இதை பார்த்த ஒருவர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து உடனடியாக இரண்டு ஆம்புலன்ஸ் வர வைத்தார் மேற்கண்ட 5 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேற்கண்ட 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி