திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் 2024ம் ஆண்டிற்கான வாக்காளர் வரைவு பட்டியல் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய தொகுதிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ள இதில் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேர்த்தல், பிழை திருத்தம், பழைய வாக்காளர்களின் பெயர் நீக்கல், முகவரி மாற்றம், தொகுதி மாற்றங்களை வாக்காளர்கள் செய்து கொள்ளலாம். வாக்காளர்களின் குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ள நியமிக்கப்பட்டுள்ள இடங்களான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளில் 29-10-2024 முதல் அனைத்து அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் சிறப்பு முகாம் நாட்கள் ஆன 16-11-2024, 17-11-2024, 23-11-2024 மற்றும் 24-11-2024 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முகாம்களில் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து பிறந்த தேதி மற்றும் குடியிருப்புகளுக்கான ஆதார் ஆகிய ஆவண நகலுடன் விண்ணப்பிக்கலாம் என பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் தெரிவித்து வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் கும்முடிபூண்டியில் 330வாக்கு சாவடிகளில் மொத்தம் 277188வாக்காளர்களில் 134875ஆண் வாக்காளர்களும், 142269பெண் வாக்காளர்களும் 44மாற்று பாலினத்தவர்களும் அடங்குவர் அதே போன்று பொன்னேரி தொகுதியில் 313வாக்குச்சாவடிகளில் உள்ள 262680மொத்த வாக்காளர்களில் 128101ஆண் வாக்காளர்களும், 134547பெண் வாக்காளர்களும் 32மாற்று பாலினத்தவர்களும் அடங்குவர்