உத்திரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் 17 வயது சிறுவன் அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, சாலையில் சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்ற நிலையில் கட்டுப்பாட்டை இழந்தது. இதில், சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பிய சிறுவனை பிடித்து சிறையில் அடைத்தனர்.