செர்பியா நாட்டின் நோவி சட் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் பயணிகள் நேற்று (நவ., 1) ரயிலுக்காக காந்திருந்தனர். அப்போது திடீரென ரயில் நிலையமேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில், 13 பேர் உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் பெண்கள் இருவரை மீட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரு பெண்கள் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.