தேர்தல் பணியாற்றும் அதிமுக கிளை செயலாளர்களுக்கு போதிய பணம் வழங்க எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளதாகவும் அனைத்து கிளை செயலாளர்களுக்கும் பணம் வழங்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருநிலை கிராமத்தில் நடைபெற்ற அதிமுக உறுப்பினர் உரிமை சீட்டு வழங்குவது தொடர்பான ஆய்வு பணி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் பலராமன் தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அதிமுக அமைச்சரும் செய்தி தொடர்பாளருமான பொன்னயைன் கலந்து கொண்டு பேசுகையில்
வரும் சட்டமன்ற தேர்தலில் தேர்தல் களப்பணியாற்றும் அதிமுக கிளைச் செயலாளர் 15 நாட்களுக்கு அனைவரின் வீடுகள் தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பணியாற்றும் வகையில் அவர்களுக்கு உரிய பணம் வழங்க எடப்பாடி முடிவு செய்துள்ளதாகவும் அனைத்து கிளைச் செயலாளர்களுக்கும் பணம் வழங்கப்படும் என்றும் கிளை செயலாளர்கள் தான் அச்சாணிகள் ஆணிவேர் என்றும்
கட்சியை தூக்கி நிறுத்தி 2026 இல் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க வேண்டும் என அதிமுக செய்தி தொடர்பாளரும் முன்னால் அமைச்சருமான பொன்னயைன் தெரிவித்தார் மேலும் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டைகளை உரிய முறையில் அனைவருக்கும் முறையாக சரிபார்த்து உடனுக்குடன் வழங்கிட வேண்டும் என்றும் கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.