
ஆவடி: கிரேனில் இருந்து தவறி கீழ விழுந்த சாலை பணியாளர் பலி
செங்குன்றம் அருகே சாலை பராமரிப்பில் இருந்தபோது கிரேனில் இருந்து தவறி கீழ விழுந்த சாலை பணியாளர் பலி. ஆவடி அடுத்த திருநின்றவூர் கோமதிபுரம் மூன்றாவது குறுக்கு தெரு சேர்ந்தவர் காதர் பாட்ஷா 56 இவர் இவர் சென்னை வண்டலூர் டு மீஞ்சூர் வெளிவட்ட சாலை பராமரிப்பு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் நேற்று மாலையில் வண்டலூர் டு மீஞ்சூர் வெளிவந்த சாலை செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் சாலை பராமரிப்பு பணியில் கிரேனில் நின்று கொண்டு வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக கிரேன் திடீரென சாய்ந்து விழுந்ததில் அப்போது காதர் பாட்ஷா மீது இரும்பு தொட்டி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார் இது குறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.