அம்பத்தூர் - Ambattur

திருவள்ளூர்: கொதிக்கும் வடிகஞ்சி உடல் மீது கொட்டியதில் சிறுமி உயிரிழப்பு

அடுப்பின் மேல் வெந்து கொண்டிருந்த அரிசி சாதம் சுடுநீர் உடலின்மீது கொட்டி உடல் வெந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள புதுப்பேட்டை கிராமத்தில் வசித்து வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிகாஷ் ரவி தாஸ் என்பவரின் மகள் நந்தினி தாஸ் 16 வயது சிறுமி வீட்டில் சமையல் செய்த போது எரிவாயு அடுப்பின் ரெகுலேட்டரில் கைமாட்டிக்கொண்டு அடுப்பின் மேல் வெந்து கொண்டிருந்த அரிசி சாதம் சுடுநீர் உடலின் மீது கொட்டி உள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காயப் பிரிவில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.  அங்கு அவரது சடலத்தை உடற்கூறாய்வு செய்து உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் உடலை ஒப்படைத்தனர். இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా