அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானிக்கு எதிராக அமெரிக்காவில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்து வருவதையடுத்து அதானியின் 7 நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த எல்ஐசி தற்போது ரூ.12,000 கோடியை இழந்துள்ளது. எல்ஐசி மட்டுமின்றி அதானி குழுமத்துக்கு கடன் கொடுத்த, ஐசிஐசிஐ, ஆக்சிஸ், இண்டஸ்இண்ட், ஐடிஎஃப்சி உள்ளிட்ட வங்கிகளின் பங்குகளும் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.