தென்கிழக்கு ஆசியாவில் உள்ள குற்றவாளிகள் இந்தியர்களை குறிவைத்து சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பயன்படுத்திய சுமார் 17,000 வாட்ஸ்அப் கணக்குகளை இந்தியா முடக்கியுள்ளது. கடல்கடந்த குற்றவியல் நெட்வொர்க்குகளை அழிக்கும் இந்திய ஏஜென்சிகளின் ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கணக்குகள் மூலம் இந்தியர்களை ஏமாற்றி பணம் திருடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலனவை இந்தியாவிற்கு வெளியே இருந்து செயல்பட்டு வந்துள்ளன.