காதலி பேச மறுத்ததால் உயிரை மாய்த்துக்கொண்ட காதலன்!
திருவொற்றியூர் கார்கில் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவா(22). வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவியை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. . இந்நிலையில் இருவரின் காதல் விவகாரம் மாணவியின் வீட்டாருக்கு தெரிய வரவே மாணவியை கண்டித்ததையடுத்து மாணவி சிவாவுடனான தொடர்பை துண்டித்துள்ளார். . இதில் மனமுடைந்த சிவா காதலி பேசாததை எண்ணி எண்ணி மீளா துயரத்திற்கு சென்று ஒரு கட்டத்தில் தனது வாழ்வை முடித்து கொள்ள எண்ணியுள்ளார். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தனது தாயீன் புடவையால் துக்கிட்டு தனது உயிரை மாய்த்து கொண்டார். சம்பவமறிந்து வந்த சாத்தாங்காடு போலீசார் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி மாணவியை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த இளைஞர் காதலி திடீரென பேச மறுத்ததால் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியள்ளது.