தீபாவளி பண்டிகை நாளை (அக்.31) கொண்டாடப்பட உள்ள நிலையில், தலைநகர் சென்னையில் காற்றின் தரம் மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக தனியார் காற்று தர நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ளது.சென்னையில் தற்பொழுது காற்றின் தரக் குறியீட்டு அளவு 135 என்ற அளவில் உள்ளது. குறிப்பாக அபிராமபுரம், அச்சுதன் நகர் பகுதிகளில் 152 என்ற அளவிலும், பெருங்குடி, வேளச்சேரி பகுதிகளில் 157 என்ற அளவிலும், நீலாங்கரை பகுதிகளில் 154 என்ற அளவிலும் உள்ளது.