10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான மெகா ஏலம் நவம்பர் மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், வீரர்களை ஏலத்தில் கேட்பதற்கான குறைந்தபட்ச Bid Amount உயர்த்தப்பட்டுள்ளது. வீரர்களை ஏலத்தில் கேட்பதற்கான குறைந்தபட்ச தொகை (Bid Amount) ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.