திருவள்ளூர் வைத்திய வீர ராகவர் சாமி கோயிலில் மாசி தெப்ப உற்சவம் நடைபெற்றது.
திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில், ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று, ஏராளமான மக்கள், கோபுர வாசல் அருகே தங்கி காலையில் பெருமாளை தரிசித்து செல்வர். வைத்திய வீர ராகவரை வழிபட்டால், உடலில் உள்ள நோய்கள் நீங்கி, சுகமான வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம். மாசி மாத அமாவாசையை ஒட்டி, மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். , அமாவாசை தினமான இன்று , இரவு, 7: 00 மணியளவில், கோயில் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக உற்சவர் வீரராகவபெருமாள் எழுந்தருளினார். நூற் றுக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.