மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் தலைவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அன்னை தெரசா ஓவியத்தில் உலகளவில் முதன்முறையாக 200 சதுரடியில் பல பிரபலமான 45 சாதனை பெண்களின் முகங்களை ரப்பர் ஸ்டாம்ப் மூலம் ஓவியத்தை மொசைக் ஓவியமாக உருவாக்கி அம்பத்தூர் மாணவி அனுஷா யுனிக்கோ உலகச் சாதனை செய்துள்ளார். 45 சாதனை பெண்கள் முகங்கள் 35,000 முறைகள் முத்திரை அச்சுகளால் உருவாக்கப்பட்டு அன்னை தெரசாவின் ஓவியம் 25 வித மிக்ஸிங் வண்ணங்களை பயன்படுத்தி தொடர்ந்து 38 மணி நேரம் யுனிக்கோ உலக சாதனையை செய்துள்ளார்.
200 சதுரடியில் உள்ள புகைப்படத்தில் இந்திய வளர்ச்சிக்காக பாடுபட்ட நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக பல முயற்சிகளை செய்து பெண்களின் தலைமுறைகளுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வரும் 45 பிரபலமான முகங்கள் கொண்ட முத்திரை அச்சில் 25 வித வண்ணங்களை பயன்படுத்தி அன்னை தெரசா அவர்களின் ஓவியத்தை உருவாக்கி யூனிக்கோ உலக சாதனை நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிறுவனம் மலேசியா மற்றும் சென்னையை தலைமையிடமாக கொண்ட யூனிக்கோ உலக சாதனை நிறுவன இயக்குனர் சிவராமன் இதனை அங்கீகரித்தார். மேலும் சாதனை மாணவியின் வீடியோ மற்றும் எவ்வாறு உருவாக்கப்பட்டது இந்த ஓவியம் என்பது குறித்த ஆவணங்கள் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.