திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு
ஏகாட்டூர் கிராமத்தில் நம்ம ஊரில் நம்ம MP, மக்களோடு மக்களாக அந்த கிராமத்தில் இரவு தங்கி அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார்.
அப்பொழுது 100-நாள் வேலை திட்டத்தில் சரிவர வேலை வழங்கப்படவில்லை என்றும், அப்படி வேலை வழங்கினாலும் ஊதியம் வழங்கப்படவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்தனர், அப்பொழுது பதில் அளித்த சசிகாந்த் செந்தில், விரைவில் அதற்கான தீர்வுகளை கொண்டு வரப்படும் என
உறுதியளித்தார்.
அதைத் தொடர்ந்து
அதை கிராமத்தைச் சேர்ந்த
காங்கிரஸ் கட்சி மூத்த தொண்டரின் வீட்டுக்குச் சென்று அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய போது இதைப் பார்த்த அவருடைய மகன் அவருடைய காலில் விழுந்து
என்னுடைய தகப்பனாருக்கு இதுவரை இதுபோல எந்த ஒரு எம்பிகளும் மரியாதை செய்ததில்லை என இரு கரங்களையும் கூப்பி நன்றி தெரிவித்தார்.
அவரின் இந்த செயல் அப்பகுதி கிராம பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதில்
நாடாளுமன்ற கிராம காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் ஏஜி சிதம்பரம்.
மாநிலத் துணைத் தலைவர் ஏகாட்டூர் ஆனந்தன். உட்பட பலர் கலந்து கொண்டனர்.