நவீன பனை ஏறும் இயந்திரம் மூலம் பனையேறும் பயிற்சி வழங்கி பனை மரங்களை அழியாமல் பாதுகாக்க கிராமப்புற பெண்களிடம் விழிப்புணர்வு மேற்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் போளாச்சி அம்மன் குளத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு
ஆர்டீ பவுண்டேஷன் காளீஸ்வரி பவுண்டேஷன் ஆகியோர் இணைந்து பனை திருவிழா என்கிற தலைப்பில்
மகளிர்க்கு பனை பொருட்கள் விற்பனை குறித்தும் மகளிர் பனையேறும் தொழிலாளர்களாக பணிபுரிந்து லாபம் ஈட்டும் வகையில் பனை மரங்களை அழியாமல் காத்திட
பனைப் பொருட்கள் பனைவெட்டு பனைவெல்லம் பதனி பனங்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான பனை உணவுப் பொருட்கள் மற்றும் பனை ஓலை கைவினை பொருட்கள் கண்காட்சியை
காட்சிப்படுத்தியும் கிராமப்புறங்களில் பெண்கள் பனை மரங்களில் ஏறுவதற்கான இயந்திரம் மூலம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பனைமரம் ஏறும் பெண் தொழிலாளி மாரியம்மாள் பெண்களுக்கு மட்டுமல்லாமல் அங்கிருந்து கிராமப்புற ஆண்களுக்கும் பயிற்சியை வழங்கினார்
திருவள்ளூர் மாவட்டத்தில் பணை ஏறும் கருவி மூலம் பனைமரம் ஏறி பெண்களும் இதன் மூலம் வருமானம் ஈட்டி பனை மரங்களை பாதுகாக்கும் வகையில் மகளிர் தின நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பனைமர ஏறும் தொழிலில் ஈடுபட்டு அதிக அளவில் வருமானம் ஈட்டும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.