திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் கனகம்மாசத்திரம் அருகே உள்ள முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சார்ந்தவர் முன்னாள் ராணுவ வீரரான வெங்கடேசன் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்று 9 -வயதில் ஒரு பெண் குழந்தையும் 7- வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ள நிலையில் சந்தியா பல ஆண்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளதாகவும் தற்பொழுது தோமூர் கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவருக்கும் தனது மனைவி சந்தியாவிற்கும் தொடர்பு இருப்பதாக வெங்கடேஷனுக்கு தெரிய வந்துள்ளது அதனை முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேசன் பலமுறை தனது மனைவி சந்தியாவை கண்டித்துள்ளார் அதை ஏற்றுக் கொள்ளாத சந்தியா தனது அண்ணன் சண்முகம் லோகேஷ் அவரது நண்பர் சதீஷ், பிரசாந்த் ஆகியோர் திட்டம் தீட்டி கூலிப்படையை ஏவி வெங்கடேசனை கார் ஏற்றி கொலை செய்து இரும்புராடு, கத்தியால் குத்தி அடித்து கொலை செய்துள்ளனர் விபத்து வழக்காக விசாரணையை தொடங்கிய போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை என்று தெரிந்தவுடன் விசாரணையை தீவிரப்படுத்தி மனைவி சந்தியாவை விசாரணை செய்ததில் அவர் கூலிப்படை ஏவி கொலை செய்தது தெரியவந்துள்ளது, சந்தியா, லோகேஷ், சண்முகம் ஆகியோரை கைது செய்து வழக்கில் தொடர்புடைய சென்னை சேர்ந்த சில கொலை செய்த நபர்களையும் போலீசார் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.