சாம்பியன்ஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா மகத்தான வெற்றி பெற்றது. 2013-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா மீண்டும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய அணிக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.