வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்று (03. 03. 2025) முதல் 30. 06. 2025 வரை நான்கு மாதங்கள் வரை காவல் ஆளிநர்களுக்கு நீர் மோர் வழங்கும் விழாவினை காவல் ஆணையாளர் சங்கர் அம்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்கள்.
ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் போலீசாரின் உடல் நலனை கருத்தில் கொண்டு. வெயிலின் தாக்கம் மற்றும் வெப்பத்தில் இருந்து உடல் வெப்ப நிலையை தணித்துக்கொள்ள காவல் ஆணையாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் 61 601 களப்பணியில் ஈடுபடும் அனைவரும் நீர், மோர். மற்றம் குளிர் பானங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு காவல் ஆணையாளர் அவர்களால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் வெயில் நேரங்களில் போக்குரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபடும் போலீசாரின் நலன் கருதி. பணி நேரங்களில் பயன்படுத்த அவர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட கூலிங் ஹெல்மெட் தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் ஆகியவற்றை போக்குவரத்து போலீசார்க்கு வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் தலைமையிடம் மற்றும் போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையாளர் பவானீஸ்வரி
போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் அன்பு அவர்கள்
உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அளிநர்கள் கலத்துக்கொண்டனர்.