பொன்னேரி: அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

51பார்த்தது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் இன்று பொன்னேரியில் மாவட்ட கழக செயலாளர் பலராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக செய்தித் தொடர்பாளர் முன்னாள் அமைச்சர் பொன்னையன், அதிமுக கழக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் நடிகை விந்தியா ஆகியோர் கலந்துகொண்டு தையல் இயந்திரம், புத்தாடை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினர். 

பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகை விந்தியா, "சூறாவளி புயல்கள் திடீரென உருவாவதைப் போல தமிழகத்தில் திடீர் அப்பாவாக முதல்வர் ஸ்டாலின் உருவாகியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் திடீர் சாதனையாக அப்பாவாகி உள்ளார். மக்கள் மனதார அம்மா என கூப்பிட்டால் அது பட்டம். அம்மா என்று கூப்பிட வைத்தால் அது மட்டம். அதிமுகவை அசைக்கவும் ஒழிக்கவும் முடியாது. முதல்வர் ஸ்டாலினையும் அம்மா ஜெயலலிதாவையும் ஒப்பிட முடியுமா? கஞ்சா, கள்ளச்சாராயம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. முதல்வர் ஸ்டாலின் எப்படி அப்பாவாக முடியும்? எத்தனை நாளைக்கு தமிழர் வேஷம் முதல்வர் ஸ்டாலின் போடுவார்?" என்றும் கேட்டுக்கொண்டார். "தமிழ்நாட்டில் அதிமுக இல்லாமல் அரசியல் இல்லை. அதிமுகவை அசைக்கவோ அழிக்கவோ முடியாது" என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி