ஆவடி - Aavadi

திருவள்ளூர்: பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுமா கிராம மக்கள் எதிர்பார்ப்பு

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் கிராமத்தில் அமைந்த பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை தியாகராய நகர் வண்டலூர் ராணிப்பேட்டை மாவட்டம் சோழிங்கநல்லூர் திருத்தணி ஆந்திர மாநிலம் திருப்பதி கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றப்பட்ட பேருந்துகள் மாநகரப் போக்குவரத்து பேருந்துகள் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டவை மீண்டும் இயக்கப்படாமல் பேரம்பாக்கம் இருளஞ்சேரி பிஞ்சிவாக்கம் கடம்பத்தூர் மப்பேடு கூவம் கொண்டாஞ்சேரி சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கிராமங்களின் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக சுங்குவார்சத்திரம் ஸ்ரீபெரும்புதூர் தண்டலம் மப்பேடு சென்னை தியாகராய நகர் வண்டலூர் ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அன்றாட வேலைகளுக்கும் மருத்துவ தேவைகளுக்கும் சென்றுவர முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.  மேலும் இப்பகுதியில் இயக்கப்பட்ட மாநகரப் பேருந்துகள் பத்துக்கும் மேற்பட்டவைகள் அடியோடு நிறுத்தப்பட்டதால் வேறு வழியின்றி இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் மட்டுமே பயணித்து வருகின்றனர். வெளிமாநிலங்களான திருப்பதி பெங்களூரு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் சோழிங்கர் பகுதிகளுக்கு பேருந்து சேவைகளை மீண்டும் இயக்கிட வேண்டும் என்று பேரம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా