வள்ளியூர்: பாஜக ஒன்றிய தலைவர் குற்றச்சாட்டு
நெல்லை மாவட்டம் காவல்கிணறு ஜங்சன் மேம்பாலத்தின் மேற்பக்கம் சர்வே எண் 1976B/2A, 1976B/1 ல் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான 8 கோடி மதிப்புடைய 40 செண்ட் நிலத்தில் ஜெய்சன் பேக்கரி நிறுவனம் கட்டிடங்களை கட்டி அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வள்ளியூர் மத்திய ஒன்றிய பாஜக தலைவர் அருள் ஜெக ரூபர்ட் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.