பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது பேராசிரியர் ஜவாஹிருல்லா, திருமாவளவன் ஆகியோரை தேசத்துரோகிகள் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து மேலப்பாளையம் பகுதி விடுதலை சிறுத்தை கட்சி செயலாளர் அப்துல் கோயா இன்று வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ஹெச். ராஜாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.