குளச்சல் - Kulachal

களியக்காவிளை: கோழிக்கழிவுகள்  கொண்டு வந்த லாரி பறிமுதல்

களியக்காவிளை: கோழிக்கழிவுகள்  கொண்டு வந்த லாரி பறிமுதல்

கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கழிவுகள் கொண்டுவரப்படுவதை கண்காணிக்கம் பணியை பலப்படுத்த குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த நிலையில் இன்று ( 1 -ம் தேதி)  இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் களியக்காவிளை  பகுதியில் சோதனையில்  ஈடுபட்டிருந்தனர்.       அப்போது கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்தை நோக்கி ஒரு கண்டைனர் லாரி வேகமாக வந்தது. போலீசார் அதனை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அதில் கோழி கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.   தொடர்ந்து லாரியில் இருந்த 2 பேரை விசாரித்த போது, அவர்கள் திருவனந்தபுரத்தை சேர்ந்த ராகுல், அஸ்வின் என்பது தெரிய வந்தது.       கேரளாவில் இருந்து நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியில் உள்ள ஒரு கம்பெனிக்கு  கொண்டு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண்டைனர் லாரி  பறிமுதல் செய்யப்பட்டது.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా