இரணியல்: சமாதானம் பேச அழைத்து ஒர்க்ஷாப் அதிபருக்கு வெட்டு

57பார்த்தது
இரணியல்: சமாதானம் பேச அழைத்து ஒர்க்ஷாப் அதிபருக்கு வெட்டு
கருங்கல் அருகே திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ். டூவீலர் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். அவரது நண்பர் ஜபர்சன் (28) கார் டிரைவர். இந்த நிலையில் தினேஷ் தனது ஒர்க் ஷாப்பில் கண்ணாடி கதவு போட வில்லுக்குறியை சேர்ந்த ராஜன் என்பவரிடம் ஒப்படைத்துள்ளார். ராஜன் செய்து கொடுத்த வேலையில் தினேஷ்க்கு திருப்தி இல்லை என்று கூறப்படுகிறது.  

சம்பவ தினம் இரவு தினேஷுக்கு போன் செய்த ராஜன் வில்லுக்குறிக்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைத்துள்ளார். பேசிக் கொண்டிருந்த போது அவர்களுக்குள் திடீர் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ராஜன் அரிவாளால் ஜெபர்சனை வெட்டியுள்ளார். மேலும் அதை தடுத்த ராஜி என்பவரையும் ராஜன் தள்ளிவிட்டதில் காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தினேஷின் கார் கண்ணாடிகளை அரிவாளால்  வெட்டி உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதில் காயமடைந்த ஜெபர்சன் மற்றும்  ராஜன் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி