குழித்துறை: ரயில்வே கேட் கீப்பர் தாக்குதல்; மேலும் ஒருவர் கைது
குழித்துறை அருகே குறுமத்தூர் ரயில்வே கேட் கீப்பர் பிளட்சன் (36) என்பவரை கடந்த வாரம் காரில் வந்த கும்பல் தாக்கி, ரயில்வே சிக்னலை உடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி, காப்புக்காடு பகுதி சேர்ந்த ஸ்டாலின் ராஜு, முஞ்சிறை பகுதியை சேர்ந்த சம்ஜோத் (25) மற்றும் கண்டால் தெரியும் நபர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் சம்ஜோத்தை மற்றொரு வழக்கில் புதுக்கடை போலீசார் கைது செய்திருந்தனர். இதையடுத்து ஜாமீனில் வந்ததும் அவரை உடனடியாக ரயில்வே போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் போலீஸ் தேடிவரும் ஸ்டாலின் ராஜு கேரளாவில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முஞ்சிறை பகுதியை சேர்ந்த எட்வின் கிளாடிஸ் (38) என்பவர் தொடர்பு உள்ளது தெரிய வந்தது. அவரை நேற்று ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.